Tuesday, November 25, 2008

சூர்யா என்ற அற்புத நடிகர்

சமிபத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஆகா என்ன அற்புதமான நடிகராக மாறிவிட்டார் சூர்யா என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கமலுக்கு வயதாகிவிட்டதே என்ற வருத்தத்தை போக்க சரியான நேரத்தில் நல்ல திறமைகளை வெளிபடுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

கமல் சினிமாவுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பிறப்பு என்றாலும், நடிப்பில் நல்ல சிஷ்யனாக தெரிகிறார் சூர்யா.

பள்ளிப்பருவ நடிப்பானாலும் சரி, கல்லூரிப் பருவ நடிப்பானாலும் சரி, காதல் பருவ நடிப்பானாலும் சரி, மகனுக்குரிய நடிப்பானாலும் சரி, தந்தைக்குரிய நடிப்பானாலும் சரி, சூர்யா அதிரவைக்கிறார்.

படத்தின் கடைசி காட்சிகளில் தந்தை சூர்யாவும் மகன் சூர்யாவும் பிரியும் காட்சி மனதை தொட்டுச் செல்கிறது. இது போல பல காட்சிகள். மகனை கல்லூரி விடுதியில் விட்டு செல்லும் காட்சியும் அதில் அடங்கும்.

மொத்தத்தில் சூர்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷம்.