Tuesday, November 25, 2008

சூர்யா என்ற அற்புத நடிகர்

சமிபத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஆகா என்ன அற்புதமான நடிகராக மாறிவிட்டார் சூர்யா என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கமலுக்கு வயதாகிவிட்டதே என்ற வருத்தத்தை போக்க சரியான நேரத்தில் நல்ல திறமைகளை வெளிபடுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

கமல் சினிமாவுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பிறப்பு என்றாலும், நடிப்பில் நல்ல சிஷ்யனாக தெரிகிறார் சூர்யா.

பள்ளிப்பருவ நடிப்பானாலும் சரி, கல்லூரிப் பருவ நடிப்பானாலும் சரி, காதல் பருவ நடிப்பானாலும் சரி, மகனுக்குரிய நடிப்பானாலும் சரி, தந்தைக்குரிய நடிப்பானாலும் சரி, சூர்யா அதிரவைக்கிறார்.

படத்தின் கடைசி காட்சிகளில் தந்தை சூர்யாவும் மகன் சூர்யாவும் பிரியும் காட்சி மனதை தொட்டுச் செல்கிறது. இது போல பல காட்சிகள். மகனை கல்லூரி விடுதியில் விட்டு செல்லும் காட்சியும் அதில் அடங்கும்.

மொத்தத்தில் சூர்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷம்.

Wednesday, June 25, 2008

தசாவதாரம் எனது பார்வையில்

தசாவதாரம் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தபோதும், நானும் என்னுடைய பங்குக்கு எழுத கடமைபட்டுள்ளேன். கலைஞானி உலகநாயகன்,பத்மஸ்ரீ, டாக்டர், கமல்ஹாசன் நடித்தால் மட்டும் இப்படத்தை சிறந்த படம் என்று நான் கூறவில்லை.

இங்கே அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பற்றி சொல்லியே ஆகவேண்டும்.நம்மில் எத்தனை பேருக்கு facial srub போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து கழுவும் பொறுமை உள்ளது? ஆனால் கமல் பத்து வேடங்களில் "makeup" போட்டது மட்டுமல்லாமல், உடல் அசைவுகளிலும், பேச்சு நடையிலும் எவ்வளவு அற்புதமாக நடித்துக் காட்டி உள்ளார். " உலக நாயகனுக்கு நிகர் உலகநாயகனே".

இங்கே நிறைய பேர் கதை இல்லை, கிராபிக்ஸ் சரி இல்லை, உலக தரம் இல்லை என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களில் பாதி பேர் CHE TAM(il) BRAHM(in)S or SHIT TAM(il) BRAHM(in)S ஆக தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். சங்கமம் படத்தில் மணிவண்ணன் விஜயகுமாரிடம் சவால் விட்டுவிட்டு வருவார். அப்போது வடிவேல் மற்றும் சார்லி, காசு போச்சு, பணம் போச்சு என்று புலம்புவார்கள். அப்போது மணிவண்ணன் கூறுவார் "சோத்துக்கு பீ...நாய்களா"....அப்படி தான் இப்படத்தை குறை கூறுபவர்களையும் திட்ட வேண்டும் போல் உள்ளது.

இராமாயணத்தில் என்ன கதை? பத்து தலை கொண்ட இராவணன் சீதையை கடத்தி கொண்டு போகிறான். கொரங்கு தூது போகிறது. கடைசியில் சீதை மீட்கப்படுகிறாள். Harry Potter 'ல் என்ன கதை?. கெட்டவன் ஒரு நல்ல சிறுவனை கொல்ல எத்தனையோ சதி செய்தாலும் கடைசியில் அவன் கொல்லப்படுகிறான்.

இது போல தான் "Butterful Effect" மற்றும் "Chaos Theory" யை தமிழக ரசிகர்களுக்கு புரியும் வகையில் கமல் கொடுத்துள்ளார். கிராபிக்ஸ் தமிழக, இந்திய திரைபடங்களுக்கு ஒப்பிடுகையில் சிறந்ததே. ஆறு கோடி பேரை Base ஆக வெய்த்து, அதிலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர், தமிழ் தெரிபவர் எத்தனை பேரோ? இப்படி ஒரு படம் வெளியிட்டதே சிறப்பான ஒன்றாகும்.

ஒன்றே ஒன்றை குறை கூற வேண்டுமானால் அது ஹிமேஷ் ரேச்மையாவின் இசை.

மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்திய திரைப்படத்தை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் படம்!

கலக்கீட்டீங்க கமல் !!!

Saturday, September 29, 2007

இந்திய அரசாங்கம் ஹிந்தியை உலக சபையில் முன்னிறுத்த உள்ளத்தை எதிர்த்து மனு

இந்திய அரசாங்கம் ஹிந்தியை உலக சபையில் முன்னிறுத்த உள்ளத்தை எதிர்த்து மனு

http://www.petitiononline.com/19652007/petition.html

Wednesday, September 19, 2007

சேதுசமுத்திர திட்டமும், ராமாயணமும்

எல்லா தமிழர்களும் ஒன்று பட வேண்டும். ஆரிய விசப்பாம்பு, தன் கொடிய அகண்ட நாக்கினால், நம்மை கொத்தக் காத்துக் கொண்டு இருக்கிறது. நம்மையெல்லாம் போலி ராமாயண கதைகளில் வரும் சுக்கிரீவன் போலவும், வீபிசினன் போலவும் நினைத்து கொண்டு இருக்கிறது.

ராமாயணம் ஓரளவு உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த யுத்தத்தின் ஆரியக் கற்பனைக் குறிப்பு, அவ்வளவே. வாலியை நேருக்கு நேர், நின்று எதிர்கொள்ள முடியாத கோழை ராமன் , ஒளிந்து நின்று முதுகுக்குப் பின்னால் குத்தினான். இதற்கு அவன் தம்பி சுக்கிரீவன் உதவினான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வாலி சுக்கிரீவனின் மனைவி மீது ஆசை பட்டான் என்று.

அதே போல வீபிசினன் , ராவணன் சீதை மீது ஆசை பட்டதாகக் கூறி, தன் சொந்த அண்ணனை காட்டிக் கொடுத்ததினால் தான் ராமன் வெற்றி பெற்றதாக கதை கூறுகிறது.

ஆரியர்களின் கற்பனை எவ்வாறு வேலை செய்திருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.

1. திராவிட அரசர்களின் சகோதரர்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும்.
2. அப்படி இழுப்பதற்கு பெரிய காரணம் வேண்டும் ( மேலே கூறிய காரணங்களின் ஒற்றுமையைப் பார்த்தால் அவை எவ்வளவு போலி என்று புரியும்) .

பத்தாயிரம் பொண்டாட்டிகளுடன் குடும்பம் நடத்திய தசரதனின் மகன் ராமனை சுத்தமான ஒழுக்கமானவனாகக் காட்டி, ஒழுக்கத்துடன் வாழ்ந்த ராவணனையும் , வாலியையும் பெண் மோகம் கொண்டவர்களாக ராமாயணம் பறை சாற்றுகிறது.

வேதங்கள் என்று நம்மை பிரித்து , நாமெல்லாம் கூலி வேலை மட்டுமே செய்ய வேண்டும் , தாங்கள் தான் கல்வி கற்க தகுதியானவர்கள் என்று கூறினார்கள் (1952 ல் கூட குல கல்வி முறையை கொண்டு வந்தவர்கள் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்திருப்பார்கள்?). நம்மை கல்வி கற்க விடாமல், அவர்கள் எழுதிய புரட்டுகளையும் பொய்களையும் நம் மீது திணித்தார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் நாம் இருக்க முடியாது. இவர்கள் ராமாயணத்தை காட்டி சேதுசமுத்திர திட்டத்தை தடை செய்வார்களே ஆனால், நம் வரலாறு படி ராமாயணம் ஒரு புரட்டு.
நாம் இந்தியாவில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும்.

இந்த திட்டத்தை நாம் கண்டிப்பாக நிறை வேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது திராவிடர்களின் மானப் பிரச்சனை.

Monday, August 20, 2007

கார் ஓட்டுபவனும் டாக்டர் மகனும்

சமீபத்தில் ஒரு முன்னால் மத்திய அமைச்சரின் சகோதரர், நடத்தும் தொலைக்காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு மூணரை வயது சிறுவன், அற்புதுமாக கார் ஓட்டுவதாகவும், அவன் பெரிய சாதனை படைத்து விட்டதாகவும், பல போட்டிகளில் பரிசு பெற்று இருப்பதாகவும் சொன்னார்கள். அவனை பேட்டியும் எடுத்து போட்டார்கள். அதை பார்க்க அதிர்ச்சியாகயிருந்தது . ஏனென்றால் இவ்வாறான சிறு பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது சமுதாயத்திற்கு விளைவிக்கும் கேடு. இந்த சிறு வயதில் அப்பிள்ளையிடம் என்ன தெளிவு இருக்கும்? நாளை பெற்றோர் இல்லாத சமயம் வண்டி எடுத்து கொண்டு போய் பெரிய விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்லுவது?.

இந்த விசயம் இப்படி இருக்க, பதினாறு வயதானச் சிறுவன் ஒருவன், தனது டாக்டர் பெற்றோர் முன் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ததற்காகக் கைது செய்தார்கள். அவனது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயது சிறுவன் பெற்றோர் முன் செய்த சிகிச்சை மாபெரும் குற்றமாகப் கருதப்படும் போது , மேலே கூறிய சிறுவர்களை போற்றுவது எந்த விதத்தில் நியாயம்?. படித்தவனுக்கு ஒரு நீதி என்றும், படிக்காதவனுக்கு ஒரு நீதி என்றும் இந்த விசயத்தில் நாம் நடந்து கொண்டுள்ளோம். இவ்வாறான சிறுவர்களை ஊக்கப் படுத்த வேண்டாம். என் மகன் 2 வயததில் கார் ஓட்டுகிறான் என்றும் பெருமிதமும் கொள்ளவேண்டாம். இது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்.

Wednesday, August 15, 2007

தமிழக அரசியலின் நாளைய நிலைமை என்ன?

தமிழக அரசியலின் நாளைய நிலைமை என்ன?

தற்போது உள்ள கலைஞரின் ஆட்சி எதெற்கெடுத்தாலும் போராடும் கம்மூனிஸ்ட்களிடமும், கோஸ்டி பூசலில் வாடி தவிக்கும் காங்ரசாரிடமும், தவளை தன் வாயலேயே கெடும் என்பதற்கு மிகப்பொறுத்தமாக விளங்கும் ராமதாசு அவர்களிடமும், சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது. போதாக்குறைக்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மாறி மாறி சன் தொலைக்காட்சியில் வந்து போகிறார்கள். சில கேள்விகள்: கலைஞர் ஆட்சி மூழு ஆட்சிக்கால பதிவியையும் வகிக்குமா? அப்படியே இருந்தாலும் சும்மா நச்சிக் கொண்டே உள்ள தோழர்களுடன் எத்தனை காலம் தான் கழிக்க முடியும். இப்பொழுதே இப்படி ஆட்டம் போடுகிறவர்கள் நாளை கலைஞர் இறந்து விட்டால், என்னென்ன காரியங்கள் செய்வார்கள்?.

தமிழ் நாட்டிற் கேற்ற நல்ல தலைவர் யார்?
திராவிட பாரம்பரியமும் , தமிழ் மீது உண்மையான பற்றுள்ள அரசியல் வாதிகள் யார் யார்? யார் யாரை நம்ப முடியும்?

ராமதாசு - இவர் சொல்லும் சில வற்றில் உடன் பாடு இருந்தாலும், இவரது நன்பகத் தன்மை மீது சில கேள்விக்குறிகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல யோசனைகளை சொல்லி இருக்கிறார். ஆனால் இருக்கும் பெரிய கேள்வி இவரை நம்ப முடியுமா?

வைகோ - "கோ" ஆகி விட்டார். இவர் என்ன பேசுகிறார் என்று கூட கேக்க நாதியில்லை.

விஜயகாந்த் - இன்னும் இவருடைய கொள்கைகள் என்னென்ன என்று சரியாகத் தெரியவில்லை. முக்கியப் பிரச்சனைகளில் நல்ல முடிவுகளை எடுக்கும் திறமை இருக்கிறதா என்ற சந்தேகம் தான்?

ஜெயலலிதா - போதுமடா இந்த கொடுமை!!

ஸ்டாலின் - சிறு பதவிகளில் இருந்து இப்போது மந்திரி ஆகி உள்ளார். ஆனால் சிறப்பாகத் திட்டம் போட்டு இவரால் காரியம் சாதிக்க முடியுமா?. எல்லோரையும் கட்டி மேய்க்கும் திறமை இருக்கிறதா?

சாதாரண திரைப்படங்களுக்குப் பால் அபிசேகம் செய்கிறோம். விளையாட்டுப் போட்டிகளை, குறிப்பாக க்ரிகெட் போட்டிகளுக்காகப் பெரிய விவாதங்கள் நடத்துகிறோம். நம்மை நாளை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்றும் நாம் யோசிக்க வேண்டும். நாம் விரும்பும் , நம்மை பாதுகாக்கும், நம்மில் உண்மையான பற்று யாரிடம் உள்ளதோ அவர்களை கண்டறிய வேண்டும்.

இதில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று நமக்குள் சண்டை இடாமல், குள்ள நரிகளுக்கு இடம் தராமல் உழைக்க வேண்டும். இப்பொழுது கூட கலைஞரும் ராமதாசும் பேசி, தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள வேண்டும். மாறி மாறி குறை கூறுவதால் கோட்டானுகளுக்குத்தான் கொண்டாட்டம்.

Tuesday, August 14, 2007

சக் தே இந்தியா - திரை விமர்சனம்

சக் தே இந்தியா - சாருக் காண் நடிப்பில் வெளி வந்துள்ள ஹிந்தி படம். நாம சப்‌டைடில் கேஸ் என்றாலும் அவ்வப்போது ஹிந்தி மொழிப் படங்களையும் பார்ப்பதுண்டு.

பெரும்பாலும் இப்போது இருக்கிற ஷங்கர் படம் மாதிரி உள்ளே ஒண்ணுமில்லாமல் வெறும் டெக்நாலஜி, ஐ ஃபை, வெளி நாட்டுத் தள படப்பிடிப்புகள், பாப் பாடல்கள் ஆக தான் இருக்கும் தற்போதைய ஹிந்தி படங்கள்.

நம்ம டைரெக்டர்ஸ் தான் மன் வாசனை தவழும் படங்கள் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்தது. பெண்கள் ஹாக்கி அணியின் கோச் ஆகா கபீர் காண் ( சாருக் காண் ) நடித்து பட்டைய கிளப்பி உள்ளார்.

நமது நாட்டில் பெண்களை ஆண்களுக்கு ஈடாக நடத்துவதில்லை என்றும், ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கு மதிப்பலிப்பதில்லை என்பதையும் தெளிவாக காட்டி உள்ளது இந்த படம்.

வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண்கள் எப்படி ஒரு டீம் ஆகா இணைந்து வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் கதை சுருக்கம். காதல் காட்சிகள் இல்லாமலும், ஆடி பாட என்று தனியாக ஈரோயின் யாரும் இல்லாததும் பெரும் சிறப்பு.

முகத்த மாத்த டெக்நாலஜி, கலர மாத்த டெக்நாலஜி என்றில்லாமல், கதைக்காக டெக்நாலஜி பயன் படுத்தி உள்ளார்கள். இப்படத்தில் நடித்த எல்லோர்க்கும் ஹாக்கி தெரியும் என்பது ஒரு இன்னொரு சிறப்பு.

எல்லோரும் குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம். இந்தியாவின் 60 வது சுதந்திர விழா சமயத்தில் வந்துள்ள ஒரு நல்ல படம்

Monday, August 13, 2007

வாழ்த்துக்கள் பதிவர்களே!!!

இப்பொழுது தான் பதி விட வந்தாலும், நான் இந்த தளத்தின் நெடு நாள் வாசகன். வெட்டிப்பயல், லக்கிலுக், இம்சை அரசி, இளா, ஓசை செல்லா, அரை பிளேடு, குமரன், ஆசிப் மீரான், சிவபாலன், செந்தழல் ரவி, விடாது கருப்பு, இட்லி வட, அபி அப்பா, மங்கை, நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், அருட்பெருங்கோ ( இவருடைய சமீபத்திய காதல் கவித ஒண்ணு மிகவும் அருமை)...இன்னும் பல நண்பர்களின் பதிவுகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். இவர்கள் போன்றோரின் திறமைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உங்கள் அனைவரையும் வலைப்பதிவுகளில் சந்திப்பத்தில் மிகவும் சந்தோசம்!!!

Saturday, February 17, 2007

இது ஒரு சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு. மீண்டும் பதி விட விருப்பம் இருப்பதால் வேலை செய்கிறதா என்று சோதனை செய்கிறேன். நன்றி.

Monday, November 06, 2006

இட ஒதுக்கீடும் ஏகலைவனும்

ஏகலைவன் ஏன் கட்டை விரலை இழந்தான் ? மஹாபாராதம் என்பது ஒரு பேச்சுக்கு உண்மை என்று கூட எடுத்துக்கொண்டாலும் , இந்த கேள்விக்கு என்ன பதில் ? துரோநாச்சாரியார் என்ற நிற வெறி பிடித்த ஆசான் தன் மாணவன் அர்ஜுன்னை விட சிறந்த வில்லாலன் என்று ஏகலைவன் பெயர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தான். இது எவ்வாறு நியாயமாகும்?. எந்த நீதிப் படி தர்மமாகும். வேண்டும் என்றால் புழுத்துப்போன வேத நூல்கள் படி நேர்மையான தர்மமாக கருதப்பபடலாம். ஆனால் சுய அறிவுள்ள, எந்த தன்மானமுள்ள வீரனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் இவ்வாறு ஏமாற்றி விட்டு இப்பொழுது இட ஒதிக்கீட்டை குறை கூறி, முதலைக் கண்ணீர் வடிக்கும் சில ஜந்துக்கள், தங்கள் முன்னோர் செய்த நற்பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் ஏன் இட ஒதுக்கீடு ?என்று கூவும் கோட்டான்கள் தங்களிடம் இருந்து இன்னும் மக்கள் முழுமையான விடுதலை பெற வில்லை என்பதை எப்போது உணர்வார்கள்?. இவர்களுக்கா தெரியாது ? இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்து விட்டு , இந்த பூனையும் பீர் குடிக்கும், என்பது போலத்தான் இருப்பார்கள் இவர்களும். ஏமாந்து போகாதீர்கள் தன்மானச் சிங்கங்களே ! இவர்களுக்கு எதிரான சுதந்திர தாகம் என்றும் இருக்கட்டும்!

Saturday, October 28, 2006

சினிமா விருதுகள்

சமீபத்திய சினிமா விருதுகள் எனக்கு கொஞ்சம் கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. அந்நியன் போன்ற படங்களுக்கு மத்தியில் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் காணாமல் போய் விட்டது...இதற்கு காரணம் என்னவென்று ஆராய விழைகிறேன். வெறும் பணம் ஈட்டுதல் மட்டுமே விருதுகளுக்குக் காரணமாக அமயக்கூடாது என்பது எனது விருப்பம். தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் பண அளவில் மிகப் பெரிய வெற்றி பெற இயலவில்லை என்றாலும், நிச்சயம் விருதுகளுக்குத் தகுதியானவை . அதுவும் அந்நியன் போன்ற படங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயம் பன்மடங்கு தகுதியானவை . அந்நியன் படம் முழுக்க முழுக்க திணிக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டது . எதுவுமே இயல்பானதாகவே இல்லை. சினிமா பார்ப்பதற்கு வேண்டுமானால் பொழுது போக்காக இருக்கலாமே தவிர விருதுகள் என்று வரும் பொழுது சிறப்பான படங்களையே ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வாறான படைப்பாளிகள் நம்மிடம் இல்லாமல் போகக் கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

Friday, October 27, 2006

சுயனலாவதி

எனக்கு ஒரு ஆசை உண்டு. நம்முடைய கிராமங்கள் பசுமை மாறா அதே புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று. இது முழுக்க முழுக்க சுய நலம் என்றே கூற வேண்டும். எப்பொழுதாவது ஒரு முறை சென்று பார்ப்பதற்காக, எல்லாம் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவதை வேறு எவ்வாறு தான் சொல்லுவது. கண்கூடாக தெரிந்தே மாறிய சில. மொட்டை வண்டி என்று சொல்லப்படும் பலகையினால் ஆனா வண்டி, சவாரி வண்டி என்று சொல்லப்படும் விரைவாக செல்லும் வண்டி , ஆண்டு தோறும் நடக்கும் கம்பம் என்று சொல்லப்படும் விழாக்கள் , தேர் நோம்பி என்று சொல்லப்படும் விழா , அறுவடைக்காக வயலுக்குச் செல்லும் நாட்கள் , உறவினர்களோடு களிக்கும் பண்டிகைகள்... இவையெல்லாம் மாறி கணினி யோடு மட்டும் என் வாழ்க்கை என்றாகி விட்ட நிலையில் எனக்குள் இருக்கும் நாட்டுப்புறத்தான் எப்பொழுதாவது முழிப்பது உண்டு. ஆனால் கிராமங்கள் கிராமங்களாவே இருக்க என்னை போன்ற ஆட்களிருக்க வேண்டாமா ?. வெளியில் ஏ சி கார்களுக்குக்காகவும் சொகுசு பங்கலோவுக்கும் ஆசைப்படும் சுயனலாவதி ஆகிவிட்டததை நினைத்து வருத்தமே!

Thursday, October 26, 2006

தூங்காதே தம்பி தூங்காதே

என்னுடைய கவலை எல்லாம் நாளைய தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றியது, சொல்லப்போனால் நாம் வளர வேண்டியதில்லை , இன்றைய சூழ்நிலையில் இருப்பதை பாதுகாத்தாலே போதுமானது. . வளர்ந்து வரும் கணினி உலகில் எதற்கெடுத்தாலும் ஆங்கில சொற்களையே பயன் படுத்துவதால் நம் செம்மொழி கொஞ்சம் கலை இழந்து தான் உள்ளது. அதை பாதுகாப்பத்தில் உங்களை போன்றோரின் பங்கு சிறந்தது. திராவிட இயக்கத்தின் கடைசி தூனாகிய கலைஞர் அவர்களுக்குப்பின் நம்முடைய நிலைமயை எண்ணிப் பார்த்தால் சற்றே கவலையாகத்தான் உள்ளது. நிற வெறி பிடித்தவர்களின் பிடியில் இருந்து நம்மை மீட்ட பெருமை திராவிட இயக்கங்களுக்கே உண்டு. இப்பொழுது ஓய்ந்திருந்த வேதாளங்கள் வேதத்தை கூறிக்கொண்டு மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. நம்மில் பலர் தூக்கத்தில் இருக்கிறோம். பீடி தூக்கி போடும் நடிகர்களின் பின்னால் வால் பிடித்து திரிகின்றோம். அவ்வக்கரையை வேறு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தினால் நன்மை உண்டாகும். வருகிற ஆண்டுகளில் நம்மை காத்துக்கொள்ள நல்ல தலைவரை உருவாக்க வேண்டும், வைகோ போன்ற கோமாளிகளை நம்பி ஏமாந்தது போதும். உங்களில் பலர் நல்ல திறமை படைத்தவர்களாக உள்ளீர்கள். திராவிட இயக்கங்களுக்கு புத்துயிர் அளிப்பது நம்முடைய அனைவரின் கடமை. இது தான் என்னுடைய முதல் பதிவு. நிறைய எழுத்து பிழைகள் இருக்கும். பொருத்துக்கொள்ளவும்.