Monday, November 06, 2006
இட ஒதுக்கீடும் ஏகலைவனும்
ஏகலைவன் ஏன் கட்டை விரலை இழந்தான் ? மஹாபாராதம் என்பது ஒரு பேச்சுக்கு உண்மை என்று கூட எடுத்துக்கொண்டாலும் , இந்த கேள்விக்கு என்ன பதில் ? துரோநாச்சாரியார் என்ற நிற வெறி பிடித்த ஆசான் தன் மாணவன் அர்ஜுன்னை விட சிறந்த வில்லாலன் என்று ஏகலைவன் பெயர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தான். இது எவ்வாறு நியாயமாகும்?. எந்த நீதிப் படி தர்மமாகும். வேண்டும் என்றால் புழுத்துப்போன வேத நூல்கள் படி நேர்மையான தர்மமாக கருதப்பபடலாம். ஆனால் சுய அறிவுள்ள, எந்த தன்மானமுள்ள வீரனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் இவ்வாறு ஏமாற்றி விட்டு இப்பொழுது இட ஒதிக்கீட்டை குறை கூறி, முதலைக் கண்ணீர் வடிக்கும் சில ஜந்துக்கள், தங்கள் முன்னோர் செய்த நற்பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் ஏன் இட ஒதுக்கீடு ?என்று கூவும் கோட்டான்கள் தங்களிடம் இருந்து இன்னும் மக்கள் முழுமையான விடுதலை பெற வில்லை என்பதை எப்போது உணர்வார்கள்?. இவர்களுக்கா தெரியாது ? இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்து விட்டு , இந்த பூனையும் பீர் குடிக்கும், என்பது போலத்தான் இருப்பார்கள் இவர்களும். ஏமாந்து போகாதீர்கள் தன்மானச் சிங்கங்களே ! இவர்களுக்கு எதிரான சுதந்திர தாகம் என்றும் இருக்கட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
I agree wiyh you! we need reservation to bring social equality.
Well said buddy..U r right!
//Anonymous said...
I agree wiyh you! we need reservation to bring social equality. //
//Anonymous said...
Well said buddy..U r right! //
அணாநி யாரே தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
தீரன்,
தங்களுடைய வலைதளத்தை நான் இப்போதுதான் பார்த்தேன். இடஒதுக்கீடு குறித்து நீங்கள் எழுத விழைந்திருப்பது பாராட்டுக்குரியது. 2000 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள் 50 ஆண்டுகள் மட்டுமே அந்த சலுகையை பெற்று அனுபவித்து வரும் சமூகத்தில் பின் தங்கிய மக்களை பார்த்து அவர்கள் சோம்பேறியாகிவிடுவார்கள் ஆகவே இட ஒதுக்கீட்டை கைவிட வேண்டுமென்று சொல்வதை கயவாளித்தனம் என்று சொல்லாமல் நாம் வேறு என்ன சொல்வது. அடுத்து கிராம வாழ்க்கை குறித்த தங்கள் கட்டுரை உங்களது ஏக்கத்தை காட்டுகிறது. எல்லோருக்குமே அந்த ஏக்கமிருக்கிறது ஆனால் உலகமயமாக்கல் சூழலோ நம்மை நமது பிறந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக நகரங்களை நோக்கி துரத்துகிறது.. விவசாயம் நலிந்து போய் விவசாயிகளும், நெசவாளிகளும் மட்டுமல்ல நாமும் நாடோடியாக்கப்பட்டுவிட்டோம்.
தோழமையுடன்
ஸ்டாலின்
அன்புள்ள ஸ்டாலின் அவர்களே! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி. இப்பொழுது தான் தமிழில் டைப் அடிக்க கற்றுக் கொண்டு இருக்கிறேன். பதிவர் பட்டறையின் செயல்களால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மறுபடியும் வந்துள்ளேன். கண்டிப்பாக முடிந்த அளவில் முயற்சி செய்கிறேன்!!
Post a Comment