சமிபத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஆகா என்ன அற்புதமான நடிகராக மாறிவிட்டார் சூர்யா என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கமலுக்கு வயதாகிவிட்டதே என்ற வருத்தத்தை போக்க சரியான நேரத்தில் நல்ல திறமைகளை வெளிபடுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
கமல் சினிமாவுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பிறப்பு என்றாலும், நடிப்பில் நல்ல சிஷ்யனாக தெரிகிறார் சூர்யா.
பள்ளிப்பருவ நடிப்பானாலும் சரி, கல்லூரிப் பருவ நடிப்பானாலும் சரி, காதல் பருவ நடிப்பானாலும் சரி, மகனுக்குரிய நடிப்பானாலும் சரி, தந்தைக்குரிய நடிப்பானாலும் சரி, சூர்யா அதிரவைக்கிறார்.
படத்தின் கடைசி காட்சிகளில் தந்தை சூர்யாவும் மகன் சூர்யாவும் பிரியும் காட்சி மனதை தொட்டுச் செல்கிறது. இது போல பல காட்சிகள். மகனை கல்லூரி விடுதியில் விட்டு செல்லும் காட்சியும் அதில் அடங்கும்.
மொத்தத்தில் சூர்யா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னுமொரு பொக்கிஷம்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
me the first:):):)
Absolutely true!
Exactly..
வழிமொழிகிறேன்
சூர்யா நம்பிக்கை தருபவராக இருக்கிறார் இன்றைய இளம் நடிகர்களில்
rapp, Joe, Anony,தருமி,சின்ன அம்மிணி .....
அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி....
யெப்!
உண்மைதான் ,
சூர்யாவின் நடிப்பு நாளாக நாளாக மெருகேறிக்கொண்டே இருக்கிறது.....இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்த நிலையிலும் , இளைய நடிகர்களின் வரிசையில் முதல் வரிசையிலும் இருக்கிறார்....
என்னதான் வாரணம் ஆயிரம் மொக்கையாக இருந்தாலும் சூர்யாவின் உழைப்புக்காகவும் , அர்ப்பணிப்புக்காகவும் பார்க்கவே செய்தல் வேண்டும்....
தெலுங்கு டப்பா படங்களை ரீமேக்'கும் நடிகரும் , தமிழ்ச் சினிமாவின் "தலை"யாய நடிகரும் , , சின்ன சூப்பற ஸ்டாரும் கற்றுக் கொள்ள வேண்டிய எளிமையும் பணீவும் அவரிடம் இருக்கின்றன...
தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் திறமையான நடிகர்கள் மக்களால் உச்ச நடிகர்களாக்கப்படுவதில்லை என்பது சிவாஜி முதல் கமல்ஹாசன் வரை தொடர்கிறது...
பார்ப்போம் , சூரியாவின் எதிர்காலம் எப்படியென்று...
மதிபாலா, உங்களுடைய ஆதங்கம் மிகச்சரியானதே. நல்ல கலைஞர்களை நாம் நன்கு ஊக்குவிப்பதில்லை. இருப்பினும் சிவாஜி, கமல் ஆகியோருக்கு ஓரளவு அங்கிகாரம் இருக்கிறது.... சூர்யாவும் நல்ல அங்கிகாரத்தை பெற்று, நல்ல படங்களை மேலும் தேர்வு செய்து, வெற்றி பெற வாழ்த்துவோம் ....
நேருக்கு நேர் சூர்யாவையும் இன்றைய சூர்யாவையும் பார்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? நடனம், நடிப்பு என்று எல்லாவற்றிலும் மெருகேறியிருக்கிறார். வேறு எந்த Distraction இல்லாமல் அவர் இந்த பாதையிலேயே போனால் பல சாதனைகளை செய்யலாம்
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், அஞ்சலை பாடலில் சூர்யாவின் body language அட்டகாசம்
(Rang de Basanti-ல் சித்தார்த் போல). அதனால அவருக்காகவே படம் பார்க்க வேண்டும்.
ஆம் பிரேம்குமார் ...சூர்யா நன்கு தேறிவிட்டார்....க்சஜினி யில் பார்க்கும் பார்வையிலும் கூட நிறைய வித்யாசங்கள் கண்பித்து இருந்தார்....ஆமிர் கான் எந்த அளவு பண்ணுகிறார் என்று பார்ப்போம்.....நிச்சயம் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது....
ஆமாம் சீனு ...அஞ்சலா சாங் சேரி குத்து....நல்ல டான்ஸ்...அதில் கூட அப்பா சூர்யா வந்த உடனே வெக்கி வெளியே போவார்களே...நல்ல காட்சியமைப்பு....
Post a Comment