தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பிரச்சனையை முன்வைத்து பலர் பதிவு எழுதியிருப்பதை வரவேற்கிறேன். வெயில்க் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளமும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. காவேரியையும், கங்கையையும் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை...
ஏரிகளை தூர் வாரி, ஆக்ரமிப்புகளை அகற்றி, ஒழுங்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துவது முக்கிய கடமையாக இருக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற பிரச்சனையைப் படிப்படியாக அணுகி சரி செய்யவேண்டும். மக்கள் முதல், அரசு வரை எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
தெருக்களைச் சுத்தமாக வெய்ப்பது முதல்....ஏரிகளை தூர் வாருதல், மற்றும் தண்ணீர் தடுப்பு அணைகள் அமைப்பது வரை...உலக வங்கியில் கடன் வாங்கலாம்....மக்களிடமே பணம் வசுளிக்கலாம் ...எவ்வளவோ வழிமுறைகள் இருக்கிறது.....ஆட்சியாளர்களும், மக்களும் தான் மனம் வெய்க்க வேண்டும்....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
செய்ய எவ்வளவோ இருக்கிறது. ஏற்கனவே நிறைய ஏரிகள் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியாயிற்று... அதனால் இருக்கிற ஏரிகளையாவது பாதுகாத்தால் சரி
ஆம் பிரேம்குமார் ...இருக்கிற ஏறி மட்டுமல்லாமல், கால்வாய் போன்றவைகளும் சுத்தமாக இருக்கவேண்டும்...சாக்கடையில் எதை வேண்டுமானுலும் கொட்டுவதாளும் கூட நீர் தேக்கம் ஏற்படுகிறது.....
Post a Comment