சமிபத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவர் அளித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் உடுமலையைச் சேர்ந்தவர். அவர்கள் படித்த மெட்ரிக் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடங்களாக திணிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக ஹிந்தி ஒரு பாடமாக எடுத்து பயின்றே ஆகவேண்டுமாம். ஒரு பள்ளியின் பெயர் கலைமகள் கல்வி நிலையம் , இன்னொன்று ஸ்ரீனிவாச வித்யாலய. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அவர்களின் கூற்றுப்படி இது நிறைய பள்ளிகளில் இப்பொழுது வழக்கமாக இருக்கிறதாம்.
தமிழை ஒரு பாடமாக எடுத்து பயிலாமலையே தமிழ்நாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்து விடலாம். ஹிந்தியோ, பிரெஞ்சோ ஒரு மாற்றுப்பாடமாக எடுத்துக்கொல்லலாம்.
இவ்வாறு ஹிந்தியோ, பிரெஞ்சோ எடுத்து பயின்றால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமென கேள்விப்பட்டுருக்கிறேன் . இது பிட்ஸ் பிலானி, அல்லது REC போன்ற வெளி மாநில கல்லூரிகளில் இடம் கிடைக்க ஏதுவாக இருக்குமாம். ஆனால் என்னைப்பொருத்தவரை தமிழ் மதிப்பெண்கள்களில் எந்த குறைபாடும் வெய்க்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரையில் தமிழைக்கூட இன்னும் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை. ஆனால் இது போன்ற பள்ளிகள் ஹிந்தியை கட்டாயப்பாடமாகக் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?
இந்த கூற்று உண்மையாக இருப்பின், தமிழக கல்வித்துறை என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்கு படுத்தும் வாரியம் என்ன பண்ணிக்கொண்டுருக்கிறது ?
ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்துப்படிப்பதில் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் அதை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கப்படவேண்டும்?
மற்றுமொரு கேள்வி, தமிழை ஏன் கட்டாயப்பாடமாக ஆக்கவில்லை? நண்பரின் கூற்றுப்படி தன் மாமா பிள்ளைகளுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரிகிறதாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
இவ்வாறான ஹிந்தி திணிப்பு அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளது. விருப்பமிருப்பவர்கள் படித்துக்கொள்ளட்டும் . ஆனால் இந்த திணிப்பைக்கூட எதிர்க்க தமிழ்நாட்டில் ஆளில்லாமல் போய்விட்டதா? அதுவும் கலைஞரின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது?
ஒரு மொழியை தேவை இருக்கும் பொழுது கற்றுக்கொள்ளுதல் அவசியமானதே. ஆனால் செயற்கையான தேவைகளை உண்டாக்கி அதை திணிக்கும் பொழுது கூட நாம் எதிர்க்கவில்லை என்றால் நம் கதி பிகார் மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைமை, கதி தான். பிகாரில் மூன்று மொழிகள் இருந்தனவாம். ஆனால் அவைகள் இப்பொழுது மைதிலி என்ற மொழியை தவிர, மற்ற மொழிகள் என்ன ஆயிற்றே என்று தெரியவில்லையாம்.
இம்மாதிரி ஒரிசா கோவா போன்ற மாநில மொழிகளும் நிறையபேருக்கு தெரிவதில்லை. அதே போல் நிறைய தெலுங்கு நண்பர்களுக்கு பேச மட்டும் தான் தெரியுமாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.
நமக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?
My kids study in a school, where Tamil is also compulsory, apart from a third language, which can be Hindi/French or whatever.
Different thinking is needed to survive in this world.
Also half the Central secretariat is filled with Tamilians only in Delhi, which has more than 10 lakhs Tamil population.
இந்தி பேசாத இந்தியை தாய்மொழியாகக் கொள்ளத இந்திய மக்களிடம் இந்தி மொழியையோ பிறமொழியோ திணிப்பவர்கள்தான் உண்மையான “தேசத்துரோகிகள்” “மக்கள் விரோதிகள்” நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்.
இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகத்தினால்தான் இன்று நாட்டின் ஒற்றுமை கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது.
நாட்டுபற்றுள்ள அனைவரும் நம்நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் நமது சொத்து.
அன்னைத் தமிழை காப்போம்! அனைத்து மொழிகளையும் மதிப்போம்!
//Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?//
இப்போது இந்தி திணிக்கப்பட்டு விழி பிதுங்கித் திணறிப் போயிருக்கும் மாணவர்களில் யாரையாவது அழைத்து இந்தியில் உரையாடிப் பாருங்களேன். கெக்கே..பிக்கே..தான். ஏட்டுச் சுரைக்காய் கவைக்கு உதவாது.
ஒரு வேளை அவர்கள் வட இந்தியா சென்று வந்தால் சரளமாகப் பேசக் கூடும்.
இதற்கு உதாரணம் நம் தமிழக மாணவர்களையே எடுத்துக் கொள்ளலாம். தமிழக மாணவர்கள் அனைவரும் 3ம் வகுப்பிற்கு மேல் ஆங்கிலம் படித்து வருகின்றனர். மாநகரங்களில் படிப்பவர் தவிர மற்ற மாணவர்கள் பேச்சு ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கிடையாது. ஒரு மொழியைக் கற்க மூன்று மாதங்கள் போதும். இந்தி படிக்காமல் வட இந்தியா சென்ற தமிழர்கள் யாரும் இந்தி பேசாமல் ஊமையாகவோ வாழ வழிதெரியாமலோ திணறிக் கொண்டு இல்லை. சொல்லப் போனால் வட இந்தியர்களை விட புலமையுடன் விளங்குகிறார்கள்.
மேலும் வட நாடு செல்லும் ஒரு சிலருக்காக நம் தமிழகத்திலேயே வசிக்கப் போகும் 99% மாணவர்களின் கல்வியில் அந்நிய மொழிகளைத் திணித்து கடும் சுமையை ஏற்றி பின் தங்கச் செய்வது எவ்விதத்தில் நியாயம்.
ஏற்கனவே பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாண்வர் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகிறது. நகர்ப் புறங்களில் வசிக்காத 90 சதம் மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கவும்.
வட இந்தியா செல்லும் மாணவர்கள் வட இந்திய மாணவர்கள் தமிழகம் வரும் போது எப்படி தமிழ் தெரியாமல் இருந்த்தாலும் கற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களோ, அவர்களைப்போல வாழ்ந்து காட்ட மாட்டார்களா?
வாழ நினைத்தால் வாழலாம்.
நீங்கள் இந்த விஷயம் இப்போது தான் நடக்கிறது என்பது போல ஆச்சர்யபடுவது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
என்னோடு பணி புரியும் தமிழ் இளைஞர்களில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் தமிழ் பேச மட்டுமே தெரியும், எழுத படிக்க தெரியாது. "நான் ஒரு வட இந்தியன்-ஆகவே என்னை காட்டி கொள்ள விரும்புகிறேன், தமிழ் எனக்கு அதிகம் பிடிக்காது" என்று சொல்லி கொள்ளும் நபர்களும் உண்டு! இவர்கள் எல்லாரும் பத்து ஆண்டுகளுக்கு முன்னமே பள்ளி படிப்பை முடித்தவர்கள் என்றால், இந்த ஹிந்தி திணிப்பு பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தம்?
//Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?///
இந்தி மட்டுமே தெரிந்த பானி பூரிக்காரன் சென்னையில் கடை போட்டு தொழில் செய்யவில்லையா ?
இந்தியை பேசிக்கொண்டு கூர்க்கா திண்டுக்கல்லிலும் தேனியிலும் 5 ரூபாய்க்கு நிற்கவில்லையா ?
இந்தியை மட்டும் பேசும் சோன் பப்புடி விற்பவன் ஓவல் வடிவ கண்ணாடி பெட்டியில் சோன் பப்புடியை போட்டுக்கொண்டு டிங்கிரி டிங்கிரி என்று மணியாட்டிக்கொண்டு செல்லவில்லையா ?
அது போலவே "தேவை" என்று வரும்போது தமிழன் ஹிந்தியும் பேசுவான், கொரியனும் பேசுவான் (என்னை மாதிரி :) )
அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்...
//Please tell me one thing, if those kids who study there, end up getting a job only in North India, how would they survive?//
வினிதா,
தங்களின் கேள்விக்கு ஏற்கனவே நிறைய நண்பர்கள் விளக்கம் அளித்துவிட்டார்கள். எனது விளக்கமும் அதுதான். தேவை இருப்பின் கற்றுக்கொள்வதல்ல நம் பிரச்சனை. வலுகட்டாயமாகத் திணிப்பது தான் பிரச்சனை. அப்படி நாம் வட நாடு சென்று தான் ஆக வேண்டும் என்றால் ஹிந்தி ஒரு மாற்றுப்படமாக படிக்கலாம், இல்லை வெளியில் பயின்றுகொள்ளலாம். அவனவன் ஸ்பானிஷ் போன்ற மொழிகளையே 24 நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள்.
ஏன் தேவையில்லாமல் திணிக்க வேண்டும்? அதுவும் நம் தாய் மொழியை விட்டுவிட்டு ?
//மேலும் வட நாடு செல்லும் ஒரு சிலருக்காக நம் தமிழகத்திலேயே வசிக்கப் போகும் 99% மாணவர்களின் கல்வியில் அந்நிய மொழிகளைத் திணித்து கடும் சுமையை ஏற்றி பின் தங்கச் செய்வது எவ்விதத்தில் நியாயம். //
அய்யா பின்னூட்டம் பெரியசாமி அவர்களே,
முற்றிலும் உண்மை. நம்ம ஊரிலும் வட நாட்டு மாணவர்கள், ஏன் ஆப்ரிக்கா மாணவர்கள் , சீனா மாணவர்கள் என்று நிறைய வந்து பயில்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாழவில்லையா?
//Joe said...
நீங்கள் இந்த விஷயம் இப்போது தான் நடக்கிறது என்பது போல ஆச்சர்யபடுவது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. //
நண்பர் ஜோ அவர்களே,
இப்பொழுது தான் கேள்விப்பட்டேன். மனம் கொதித்துவிட்டது. தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயப்பாடமாகும் என்று கனவிலும் கூட நான் கருதியதில்லை. இப்படி நாம் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன்.
தோழர் செந்தழலாரே ,
உங்கள் டிங்கிரி டிங்கிரி பயன்பாட்டை நினைத்து ஏன் நண்பன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான். எங்கிருந்து இதைப் பிடித்தீர்கள்?
//அது போலவே "தேவை" என்று வரும்போது தமிழன் ஹிந்தியும் பேசுவான், கொரியனும் பேசுவான் (என்னை மாதிரி :) )
அதனால் இந்த இந்தி படிச்சா வடநாட்டுல போய் பொழைச்சுக்கலாம் என்ற பழைய பல்லவியை பாடுவதை நிறுத்துங்கள் முதலில்...//
உண்மையான கூற்று. ஏன் இந்த பல்லவியை இன்னும் பாடுகிறார்கள் என்று தான் எனக்கும் வேதனையாக இருக்கிறது.
//கரிகாலன் said... இந்தி பேசாத இந்தியை தாய்மொழியாகக் கொள்ளத இந்திய மக்களிடம் இந்தி மொழியையோ பிறமொழியோ திணிப்பவர்கள்தான் உண்மையான “தேசத்துரோகிகள்” “மக்கள் விரோதிகள்” நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்.//
நண்பர் கரிகாலன் அவர்களே, உண்மை. ஹிந்தி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என் தமிழர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை? நீங்கள் இந்தியர்கள் தானே? என்று....அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துக்கூறி, நாங்கள் இந்தியர்கள் தான் , ஆனால் ஹிந்தியர்கள் இல்லை என்று....
Post a Comment