Saturday, October 28, 2006

சினிமா விருதுகள்

சமீபத்திய சினிமா விருதுகள் எனக்கு கொஞ்சம் கவலை அளிப்பதாகத்தான் உள்ளது. அந்நியன் போன்ற படங்களுக்கு மத்தியில் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் காணாமல் போய் விட்டது...இதற்கு காரணம் என்னவென்று ஆராய விழைகிறேன். வெறும் பணம் ஈட்டுதல் மட்டுமே விருதுகளுக்குக் காரணமாக அமயக்கூடாது என்பது எனது விருப்பம். தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் பண அளவில் மிகப் பெரிய வெற்றி பெற இயலவில்லை என்றாலும், நிச்சயம் விருதுகளுக்குத் தகுதியானவை . அதுவும் அந்நியன் போன்ற படங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயம் பன்மடங்கு தகுதியானவை . அந்நியன் படம் முழுக்க முழுக்க திணிக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டது . எதுவுமே இயல்பானதாகவே இல்லை. சினிமா பார்ப்பதற்கு வேண்டுமானால் பொழுது போக்காக இருக்கலாமே தவிர விருதுகள் என்று வரும் பொழுது சிறப்பான படங்களையே ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வாறான படைப்பாளிகள் நம்மிடம் இல்லாமல் போகக் கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

Friday, October 27, 2006

சுயனலாவதி

எனக்கு ஒரு ஆசை உண்டு. நம்முடைய கிராமங்கள் பசுமை மாறா அதே புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று. இது முழுக்க முழுக்க சுய நலம் என்றே கூற வேண்டும். எப்பொழுதாவது ஒரு முறை சென்று பார்ப்பதற்காக, எல்லாம் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவதை வேறு எவ்வாறு தான் சொல்லுவது. கண்கூடாக தெரிந்தே மாறிய சில. மொட்டை வண்டி என்று சொல்லப்படும் பலகையினால் ஆனா வண்டி, சவாரி வண்டி என்று சொல்லப்படும் விரைவாக செல்லும் வண்டி , ஆண்டு தோறும் நடக்கும் கம்பம் என்று சொல்லப்படும் விழாக்கள் , தேர் நோம்பி என்று சொல்லப்படும் விழா , அறுவடைக்காக வயலுக்குச் செல்லும் நாட்கள் , உறவினர்களோடு களிக்கும் பண்டிகைகள்... இவையெல்லாம் மாறி கணினி யோடு மட்டும் என் வாழ்க்கை என்றாகி விட்ட நிலையில் எனக்குள் இருக்கும் நாட்டுப்புறத்தான் எப்பொழுதாவது முழிப்பது உண்டு. ஆனால் கிராமங்கள் கிராமங்களாவே இருக்க என்னை போன்ற ஆட்களிருக்க வேண்டாமா ?. வெளியில் ஏ சி கார்களுக்குக்காகவும் சொகுசு பங்கலோவுக்கும் ஆசைப்படும் சுயனலாவதி ஆகிவிட்டததை நினைத்து வருத்தமே!

Thursday, October 26, 2006

தூங்காதே தம்பி தூங்காதே

என்னுடைய கவலை எல்லாம் நாளைய தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றியது, சொல்லப்போனால் நாம் வளர வேண்டியதில்லை , இன்றைய சூழ்நிலையில் இருப்பதை பாதுகாத்தாலே போதுமானது. . வளர்ந்து வரும் கணினி உலகில் எதற்கெடுத்தாலும் ஆங்கில சொற்களையே பயன் படுத்துவதால் நம் செம்மொழி கொஞ்சம் கலை இழந்து தான் உள்ளது. அதை பாதுகாப்பத்தில் உங்களை போன்றோரின் பங்கு சிறந்தது. திராவிட இயக்கத்தின் கடைசி தூனாகிய கலைஞர் அவர்களுக்குப்பின் நம்முடைய நிலைமயை எண்ணிப் பார்த்தால் சற்றே கவலையாகத்தான் உள்ளது. நிற வெறி பிடித்தவர்களின் பிடியில் இருந்து நம்மை மீட்ட பெருமை திராவிட இயக்கங்களுக்கே உண்டு. இப்பொழுது ஓய்ந்திருந்த வேதாளங்கள் வேதத்தை கூறிக்கொண்டு மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. நம்மில் பலர் தூக்கத்தில் இருக்கிறோம். பீடி தூக்கி போடும் நடிகர்களின் பின்னால் வால் பிடித்து திரிகின்றோம். அவ்வக்கரையை வேறு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தினால் நன்மை உண்டாகும். வருகிற ஆண்டுகளில் நம்மை காத்துக்கொள்ள நல்ல தலைவரை உருவாக்க வேண்டும், வைகோ போன்ற கோமாளிகளை நம்பி ஏமாந்தது போதும். உங்களில் பலர் நல்ல திறமை படைத்தவர்களாக உள்ளீர்கள். திராவிட இயக்கங்களுக்கு புத்துயிர் அளிப்பது நம்முடைய அனைவரின் கடமை. இது தான் என்னுடைய முதல் பதிவு. நிறைய எழுத்து பிழைகள் இருக்கும். பொருத்துக்கொள்ளவும்.