Thursday, October 26, 2006

தூங்காதே தம்பி தூங்காதே

என்னுடைய கவலை எல்லாம் நாளைய தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றியது, சொல்லப்போனால் நாம் வளர வேண்டியதில்லை , இன்றைய சூழ்நிலையில் இருப்பதை பாதுகாத்தாலே போதுமானது. . வளர்ந்து வரும் கணினி உலகில் எதற்கெடுத்தாலும் ஆங்கில சொற்களையே பயன் படுத்துவதால் நம் செம்மொழி கொஞ்சம் கலை இழந்து தான் உள்ளது. அதை பாதுகாப்பத்தில் உங்களை போன்றோரின் பங்கு சிறந்தது. திராவிட இயக்கத்தின் கடைசி தூனாகிய கலைஞர் அவர்களுக்குப்பின் நம்முடைய நிலைமயை எண்ணிப் பார்த்தால் சற்றே கவலையாகத்தான் உள்ளது. நிற வெறி பிடித்தவர்களின் பிடியில் இருந்து நம்மை மீட்ட பெருமை திராவிட இயக்கங்களுக்கே உண்டு. இப்பொழுது ஓய்ந்திருந்த வேதாளங்கள் வேதத்தை கூறிக்கொண்டு மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. நம்மில் பலர் தூக்கத்தில் இருக்கிறோம். பீடி தூக்கி போடும் நடிகர்களின் பின்னால் வால் பிடித்து திரிகின்றோம். அவ்வக்கரையை வேறு நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தினால் நன்மை உண்டாகும். வருகிற ஆண்டுகளில் நம்மை காத்துக்கொள்ள நல்ல தலைவரை உருவாக்க வேண்டும், வைகோ போன்ற கோமாளிகளை நம்பி ஏமாந்தது போதும். உங்களில் பலர் நல்ல திறமை படைத்தவர்களாக உள்ளீர்கள். திராவிட இயக்கங்களுக்கு புத்துயிர் அளிப்பது நம்முடைய அனைவரின் கடமை. இது தான் என்னுடைய முதல் பதிவு. நிறைய எழுத்து பிழைகள் இருக்கும். பொருத்துக்கொள்ளவும்.

8 comments:

குழலி / Kuzhali said...

வலைப்பதிவு உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

பார்க்க http://dravidatamils.blogspot.com/

Anonymous said...

Yes I agree with your statment! We should wake up and do something!

Anonymous said...

//திராவிட இயக்கத்தின் கடைசி தூனாகிய கலைஞர் அவர்களுக்குப்பின் நம்முடைய நிலைமயை என்னி பார்த்தால் சற்றே கவலையாகத்தான் உள்ளது//

கடைசி தூனாம்.. கொடுமையடா சாமி...

ஏன் அண்ணே உங்களுக்கு வேற வேலையே கிடையாதா?

போங்கண்ணே., போயி புள்ள குட்டிகளை படிக்க வைங்கண்ணே.

Anonymous said...

வாங்க தீரன். வணக்கம். நல்லா எழுதுகிறீர்கள். எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலுங்கள். உதாரணமாக "கலை இலந்து" என்றில்லாமல் "கலை இழந்து" என்பதே சரியாயிருக்கும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். வாழ்த்துக்கள்

தீரன் said...

// John ஜான் போஸ்கோ//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!! மிக்க நன்றி

தீரன் said...

//கடைசி தூனாம்.. கொடுமையடா சாமி...
ஏன் அண்ணே உங்களுக்கு வேற வேலையே கிடையாதா?
போங்கண்ணே., போயி புள்ள குட்டிகளை படிக்க வைங்கண்ணே//

அணாநி அண்ணே...படிக்க வைக்கத்தான் இந்த கஸ்டம்...சூத்திரவால் படிக்கறதுனா பெரிய கஸ்டம் னு நோக்கு தெரியதோனோ

தீரன் said...

குழலி / Kuzhali said...
வலைப்பதிவு உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

பார்க்க http://dravidatamils.blogspot.com/


வரவேற் புக்கு மிக்க நன்றி!! திராவிடர் புகழ் ஓங்குக!!

seik mohamed said...

welcome
welcome
welcome