Friday, October 27, 2006
சுயனலாவதி
எனக்கு ஒரு ஆசை உண்டு. நம்முடைய கிராமங்கள் பசுமை மாறா அதே புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று. இது முழுக்க முழுக்க சுய நலம் என்றே கூற வேண்டும். எப்பொழுதாவது ஒரு முறை சென்று பார்ப்பதற்காக, எல்லாம் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவதை வேறு எவ்வாறு தான் சொல்லுவது. கண்கூடாக தெரிந்தே மாறிய சில. மொட்டை வண்டி என்று சொல்லப்படும் பலகையினால் ஆனா வண்டி, சவாரி வண்டி என்று சொல்லப்படும் விரைவாக செல்லும் வண்டி , ஆண்டு தோறும் நடக்கும் கம்பம் என்று சொல்லப்படும் விழாக்கள் , தேர் நோம்பி என்று சொல்லப்படும் விழா , அறுவடைக்காக வயலுக்குச் செல்லும் நாட்கள் , உறவினர்களோடு களிக்கும் பண்டிகைகள்... இவையெல்லாம் மாறி கணினி யோடு மட்டும் என் வாழ்க்கை என்றாகி விட்ட நிலையில் எனக்குள் இருக்கும் நாட்டுப்புறத்தான் எப்பொழுதாவது முழிப்பது உண்டு. ஆனால் கிராமங்கள் கிராமங்களாவே இருக்க என்னை போன்ற ஆட்களிருக்க வேண்டாமா ?. வெளியில் ஏ சி கார்களுக்குக்காகவும் சொகுசு பங்கலோவுக்கும் ஆசைப்படும் சுயனலாவதி ஆகிவிட்டததை நினைத்து வருத்தமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment