Monday, August 20, 2007

கார் ஓட்டுபவனும் டாக்டர் மகனும்

சமீபத்தில் ஒரு முன்னால் மத்திய அமைச்சரின் சகோதரர், நடத்தும் தொலைக்காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு மூணரை வயது சிறுவன், அற்புதுமாக கார் ஓட்டுவதாகவும், அவன் பெரிய சாதனை படைத்து விட்டதாகவும், பல போட்டிகளில் பரிசு பெற்று இருப்பதாகவும் சொன்னார்கள். அவனை பேட்டியும் எடுத்து போட்டார்கள். அதை பார்க்க அதிர்ச்சியாகயிருந்தது . ஏனென்றால் இவ்வாறான சிறு பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது சமுதாயத்திற்கு விளைவிக்கும் கேடு. இந்த சிறு வயதில் அப்பிள்ளையிடம் என்ன தெளிவு இருக்கும்? நாளை பெற்றோர் இல்லாத சமயம் வண்டி எடுத்து கொண்டு போய் பெரிய விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்லுவது?.

இந்த விசயம் இப்படி இருக்க, பதினாறு வயதானச் சிறுவன் ஒருவன், தனது டாக்டர் பெற்றோர் முன் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ததற்காகக் கைது செய்தார்கள். அவனது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயது சிறுவன் பெற்றோர் முன் செய்த சிகிச்சை மாபெரும் குற்றமாகப் கருதப்படும் போது , மேலே கூறிய சிறுவர்களை போற்றுவது எந்த விதத்தில் நியாயம்?. படித்தவனுக்கு ஒரு நீதி என்றும், படிக்காதவனுக்கு ஒரு நீதி என்றும் இந்த விசயத்தில் நாம் நடந்து கொண்டுள்ளோம். இவ்வாறான சிறுவர்களை ஊக்கப் படுத்த வேண்டாம். என் மகன் 2 வயததில் கார் ஓட்டுகிறான் என்றும் பெருமிதமும் கொள்ளவேண்டாம். இது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்.

Wednesday, August 15, 2007

தமிழக அரசியலின் நாளைய நிலைமை என்ன?

தமிழக அரசியலின் நாளைய நிலைமை என்ன?

தற்போது உள்ள கலைஞரின் ஆட்சி எதெற்கெடுத்தாலும் போராடும் கம்மூனிஸ்ட்களிடமும், கோஸ்டி பூசலில் வாடி தவிக்கும் காங்ரசாரிடமும், தவளை தன் வாயலேயே கெடும் என்பதற்கு மிகப்பொறுத்தமாக விளங்கும் ராமதாசு அவர்களிடமும், சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது. போதாக்குறைக்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மாறி மாறி சன் தொலைக்காட்சியில் வந்து போகிறார்கள். சில கேள்விகள்: கலைஞர் ஆட்சி மூழு ஆட்சிக்கால பதிவியையும் வகிக்குமா? அப்படியே இருந்தாலும் சும்மா நச்சிக் கொண்டே உள்ள தோழர்களுடன் எத்தனை காலம் தான் கழிக்க முடியும். இப்பொழுதே இப்படி ஆட்டம் போடுகிறவர்கள் நாளை கலைஞர் இறந்து விட்டால், என்னென்ன காரியங்கள் செய்வார்கள்?.

தமிழ் நாட்டிற் கேற்ற நல்ல தலைவர் யார்?
திராவிட பாரம்பரியமும் , தமிழ் மீது உண்மையான பற்றுள்ள அரசியல் வாதிகள் யார் யார்? யார் யாரை நம்ப முடியும்?

ராமதாசு - இவர் சொல்லும் சில வற்றில் உடன் பாடு இருந்தாலும், இவரது நன்பகத் தன்மை மீது சில கேள்விக்குறிகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல யோசனைகளை சொல்லி இருக்கிறார். ஆனால் இருக்கும் பெரிய கேள்வி இவரை நம்ப முடியுமா?

வைகோ - "கோ" ஆகி விட்டார். இவர் என்ன பேசுகிறார் என்று கூட கேக்க நாதியில்லை.

விஜயகாந்த் - இன்னும் இவருடைய கொள்கைகள் என்னென்ன என்று சரியாகத் தெரியவில்லை. முக்கியப் பிரச்சனைகளில் நல்ல முடிவுகளை எடுக்கும் திறமை இருக்கிறதா என்ற சந்தேகம் தான்?

ஜெயலலிதா - போதுமடா இந்த கொடுமை!!

ஸ்டாலின் - சிறு பதவிகளில் இருந்து இப்போது மந்திரி ஆகி உள்ளார். ஆனால் சிறப்பாகத் திட்டம் போட்டு இவரால் காரியம் சாதிக்க முடியுமா?. எல்லோரையும் கட்டி மேய்க்கும் திறமை இருக்கிறதா?

சாதாரண திரைப்படங்களுக்குப் பால் அபிசேகம் செய்கிறோம். விளையாட்டுப் போட்டிகளை, குறிப்பாக க்ரிகெட் போட்டிகளுக்காகப் பெரிய விவாதங்கள் நடத்துகிறோம். நம்மை நாளை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்றும் நாம் யோசிக்க வேண்டும். நாம் விரும்பும் , நம்மை பாதுகாக்கும், நம்மில் உண்மையான பற்று யாரிடம் உள்ளதோ அவர்களை கண்டறிய வேண்டும்.

இதில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று நமக்குள் சண்டை இடாமல், குள்ள நரிகளுக்கு இடம் தராமல் உழைக்க வேண்டும். இப்பொழுது கூட கலைஞரும் ராமதாசும் பேசி, தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள வேண்டும். மாறி மாறி குறை கூறுவதால் கோட்டானுகளுக்குத்தான் கொண்டாட்டம்.

Tuesday, August 14, 2007

சக் தே இந்தியா - திரை விமர்சனம்

சக் தே இந்தியா - சாருக் காண் நடிப்பில் வெளி வந்துள்ள ஹிந்தி படம். நாம சப்‌டைடில் கேஸ் என்றாலும் அவ்வப்போது ஹிந்தி மொழிப் படங்களையும் பார்ப்பதுண்டு.

பெரும்பாலும் இப்போது இருக்கிற ஷங்கர் படம் மாதிரி உள்ளே ஒண்ணுமில்லாமல் வெறும் டெக்நாலஜி, ஐ ஃபை, வெளி நாட்டுத் தள படப்பிடிப்புகள், பாப் பாடல்கள் ஆக தான் இருக்கும் தற்போதைய ஹிந்தி படங்கள்.

நம்ம டைரெக்டர்ஸ் தான் மன் வாசனை தவழும் படங்கள் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்தது. பெண்கள் ஹாக்கி அணியின் கோச் ஆகா கபீர் காண் ( சாருக் காண் ) நடித்து பட்டைய கிளப்பி உள்ளார்.

நமது நாட்டில் பெண்களை ஆண்களுக்கு ஈடாக நடத்துவதில்லை என்றும், ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கு மதிப்பலிப்பதில்லை என்பதையும் தெளிவாக காட்டி உள்ளது இந்த படம்.

வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண்கள் எப்படி ஒரு டீம் ஆகா இணைந்து வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் கதை சுருக்கம். காதல் காட்சிகள் இல்லாமலும், ஆடி பாட என்று தனியாக ஈரோயின் யாரும் இல்லாததும் பெரும் சிறப்பு.

முகத்த மாத்த டெக்நாலஜி, கலர மாத்த டெக்நாலஜி என்றில்லாமல், கதைக்காக டெக்நாலஜி பயன் படுத்தி உள்ளார்கள். இப்படத்தில் நடித்த எல்லோர்க்கும் ஹாக்கி தெரியும் என்பது ஒரு இன்னொரு சிறப்பு.

எல்லோரும் குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம். இந்தியாவின் 60 வது சுதந்திர விழா சமயத்தில் வந்துள்ள ஒரு நல்ல படம்

Monday, August 13, 2007

வாழ்த்துக்கள் பதிவர்களே!!!

இப்பொழுது தான் பதி விட வந்தாலும், நான் இந்த தளத்தின் நெடு நாள் வாசகன். வெட்டிப்பயல், லக்கிலுக், இம்சை அரசி, இளா, ஓசை செல்லா, அரை பிளேடு, குமரன், ஆசிப் மீரான், சிவபாலன், செந்தழல் ரவி, விடாது கருப்பு, இட்லி வட, அபி அப்பா, மங்கை, நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், அருட்பெருங்கோ ( இவருடைய சமீபத்திய காதல் கவித ஒண்ணு மிகவும் அருமை)...இன்னும் பல நண்பர்களின் பதிவுகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். இவர்கள் போன்றோரின் திறமைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உங்கள் அனைவரையும் வலைப்பதிவுகளில் சந்திப்பத்தில் மிகவும் சந்தோசம்!!!