சக் தே இந்தியா - சாருக் காண் நடிப்பில் வெளி வந்துள்ள ஹிந்தி படம். நாம சப்டைடில் கேஸ் என்றாலும் அவ்வப்போது ஹிந்தி மொழிப் படங்களையும் பார்ப்பதுண்டு.
பெரும்பாலும் இப்போது இருக்கிற ஷங்கர் படம் மாதிரி உள்ளே ஒண்ணுமில்லாமல் வெறும் டெக்நாலஜி, ஐ ஃபை, வெளி நாட்டுத் தள படப்பிடிப்புகள், பாப் பாடல்கள் ஆக தான் இருக்கும் தற்போதைய ஹிந்தி படங்கள்.
நம்ம டைரெக்டர்ஸ் தான் மன் வாசனை தவழும் படங்கள் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் இந்த படம் சற்று வித்தியாசமாக இருந்தது. பெண்கள் ஹாக்கி அணியின் கோச் ஆகா கபீர் காண் ( சாருக் காண் ) நடித்து பட்டைய கிளப்பி உள்ளார்.
நமது நாட்டில் பெண்களை ஆண்களுக்கு ஈடாக நடத்துவதில்லை என்றும், ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கு மதிப்பலிப்பதில்லை என்பதையும் தெளிவாக காட்டி உள்ளது இந்த படம்.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெண்கள் எப்படி ஒரு டீம் ஆகா இணைந்து வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் கதை சுருக்கம். காதல் காட்சிகள் இல்லாமலும், ஆடி பாட என்று தனியாக ஈரோயின் யாரும் இல்லாததும் பெரும் சிறப்பு.
முகத்த மாத்த டெக்நாலஜி, கலர மாத்த டெக்நாலஜி என்றில்லாமல், கதைக்காக டெக்நாலஜி பயன் படுத்தி உள்ளார்கள். இப்படத்தில் நடித்த எல்லோர்க்கும் ஹாக்கி தெரியும் என்பது ஒரு இன்னொரு சிறப்பு.
எல்லோரும் குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம். இந்தியாவின் 60 வது சுதந்திர விழா சமயத்தில் வந்துள்ள ஒரு நல்ல படம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அப்ப... பார்க்கணுமே!!
நன்றி, தீரன்!!
தென்றல் said...
அப்ப... பார்க்கணுமே!!
நன்றி, தீரன்!!
நன்றி தென்றல் . பார்த்த பிறகு தங்களின் கருத்தையும் தெரிவியுங்கள்.
Post a Comment