Monday, August 20, 2007

கார் ஓட்டுபவனும் டாக்டர் மகனும்

சமீபத்தில் ஒரு முன்னால் மத்திய அமைச்சரின் சகோதரர், நடத்தும் தொலைக்காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு மூணரை வயது சிறுவன், அற்புதுமாக கார் ஓட்டுவதாகவும், அவன் பெரிய சாதனை படைத்து விட்டதாகவும், பல போட்டிகளில் பரிசு பெற்று இருப்பதாகவும் சொன்னார்கள். அவனை பேட்டியும் எடுத்து போட்டார்கள். அதை பார்க்க அதிர்ச்சியாகயிருந்தது . ஏனென்றால் இவ்வாறான சிறு பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது சமுதாயத்திற்கு விளைவிக்கும் கேடு. இந்த சிறு வயதில் அப்பிள்ளையிடம் என்ன தெளிவு இருக்கும்? நாளை பெற்றோர் இல்லாத சமயம் வண்டி எடுத்து கொண்டு போய் பெரிய விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்லுவது?.

இந்த விசயம் இப்படி இருக்க, பதினாறு வயதானச் சிறுவன் ஒருவன், தனது டாக்டர் பெற்றோர் முன் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ததற்காகக் கைது செய்தார்கள். அவனது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டார்கள். பதினாறு வயது சிறுவன் பெற்றோர் முன் செய்த சிகிச்சை மாபெரும் குற்றமாகப் கருதப்படும் போது , மேலே கூறிய சிறுவர்களை போற்றுவது எந்த விதத்தில் நியாயம்?. படித்தவனுக்கு ஒரு நீதி என்றும், படிக்காதவனுக்கு ஒரு நீதி என்றும் இந்த விசயத்தில் நாம் நடந்து கொண்டுள்ளோம். இவ்வாறான சிறுவர்களை ஊக்கப் படுத்த வேண்டாம். என் மகன் 2 வயததில் கார் ஓட்டுகிறான் என்றும் பெருமிதமும் கொள்ளவேண்டாம். இது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்.

1 comment:

Unknown said...

சரியாகச் சொன்னீர்கள்!

தற்போதைய பெற்றோர்களின் சாதனைப் பைத்தியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.