தமிழக அரசியலின் நாளைய நிலைமை என்ன?
தற்போது உள்ள கலைஞரின் ஆட்சி எதெற்கெடுத்தாலும் போராடும் கம்மூனிஸ்ட்களிடமும், கோஸ்டி பூசலில் வாடி தவிக்கும் காங்ரசாரிடமும், தவளை தன் வாயலேயே கெடும் என்பதற்கு மிகப்பொறுத்தமாக விளங்கும் ராமதாசு அவர்களிடமும், சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது. போதாக்குறைக்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மாறி மாறி சன் தொலைக்காட்சியில் வந்து போகிறார்கள். சில கேள்விகள்: கலைஞர் ஆட்சி மூழு ஆட்சிக்கால பதிவியையும் வகிக்குமா? அப்படியே இருந்தாலும் சும்மா நச்சிக் கொண்டே உள்ள தோழர்களுடன் எத்தனை காலம் தான் கழிக்க முடியும். இப்பொழுதே இப்படி ஆட்டம் போடுகிறவர்கள் நாளை கலைஞர் இறந்து விட்டால், என்னென்ன காரியங்கள் செய்வார்கள்?.
தமிழ் நாட்டிற் கேற்ற நல்ல தலைவர் யார்?
திராவிட பாரம்பரியமும் , தமிழ் மீது உண்மையான பற்றுள்ள அரசியல் வாதிகள் யார் யார்? யார் யாரை நம்ப முடியும்?
ராமதாசு - இவர் சொல்லும் சில வற்றில் உடன் பாடு இருந்தாலும், இவரது நன்பகத் தன்மை மீது சில கேள்விக்குறிகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல யோசனைகளை சொல்லி இருக்கிறார். ஆனால் இருக்கும் பெரிய கேள்வி இவரை நம்ப முடியுமா?
வைகோ - "கோ" ஆகி விட்டார். இவர் என்ன பேசுகிறார் என்று கூட கேக்க நாதியில்லை.
விஜயகாந்த் - இன்னும் இவருடைய கொள்கைகள் என்னென்ன என்று சரியாகத் தெரியவில்லை. முக்கியப் பிரச்சனைகளில் நல்ல முடிவுகளை எடுக்கும் திறமை இருக்கிறதா என்ற சந்தேகம் தான்?
ஜெயலலிதா - போதுமடா இந்த கொடுமை!!
ஸ்டாலின் - சிறு பதவிகளில் இருந்து இப்போது மந்திரி ஆகி உள்ளார். ஆனால் சிறப்பாகத் திட்டம் போட்டு இவரால் காரியம் சாதிக்க முடியுமா?. எல்லோரையும் கட்டி மேய்க்கும் திறமை இருக்கிறதா?
சாதாரண திரைப்படங்களுக்குப் பால் அபிசேகம் செய்கிறோம். விளையாட்டுப் போட்டிகளை, குறிப்பாக க்ரிகெட் போட்டிகளுக்காகப் பெரிய விவாதங்கள் நடத்துகிறோம். நம்மை நாளை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்றும் நாம் யோசிக்க வேண்டும். நாம் விரும்பும் , நம்மை பாதுகாக்கும், நம்மில் உண்மையான பற்று யாரிடம் உள்ளதோ அவர்களை கண்டறிய வேண்டும்.
இதில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று நமக்குள் சண்டை இடாமல், குள்ள நரிகளுக்கு இடம் தராமல் உழைக்க வேண்டும். இப்பொழுது கூட கலைஞரும் ராமதாசும் பேசி, தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள வேண்டும். மாறி மாறி குறை கூறுவதால் கோட்டானுகளுக்குத்தான் கொண்டாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தமிழ் நாட்டிற் கேற்ற நல்ல தலைவர் யார்?
சோனியா காந்திதான்... ஏன்?
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான். :-))
உண்மையில் யோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது.
//நாளை கலைஞர் இறந்து விட்டால்//
நாளை ஜெயலலிதா,ராமதாஸ்,வைகோ ,தோழர்களுக்கு சாவு வராதுண்ணு உமக்கு தெரியுமா? சும்மா வாயை வச்சுகிட்டி இருமய்யா.
////நாளை கலைஞர் இறந்து விட்டால்//
நாளை ஜெயலலிதா,ராமதாஸ்,வைகோ ,தோழர்களுக்கு சாவு வராதுண்ணு உமக்கு தெரியுமா? சும்மா வாயை வச்சுகிட்டி இருமய்யா.//
ஐ.சி.யு-விலிருந்தும் ஆட்சி புரிவார் அன்புத்தலைவர் :)
பாடையில போற வயசுல மேடையில உக்காந்துகிட்டு இருக்காங்க. இது எல்லா கட்சித் தலைகளுக்கும் பொருந்தும்.
வடுவூர் குமார் said...
//வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான். :-))
உண்மையில் யோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது//
வடுவூர் குமார் அவர்களே,
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லி நம்மகு நாமே ஆப்பு வைத்தது போதும்...
தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தமிழன் தான் வர வேண்டும்!!
ஜோ / Joe said...
//நாளை கலைஞர் இறந்து விட்டால்//
நாளை ஜெயலலிதா,ராமதாஸ்,வைகோ ,தோழர்களுக்கு சாவு வராதுண்ணு உமக்கு தெரியுமா? சும்மா வாயை வச்சுகிட்டி இருமய்யா.
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் நண்பரே... வயதானவர் என்ற முறையில் இயற்கையாய் யாருக்கு முதலில் வரும்?
//பாடையில போற வயசுல மேடையில உக்காந்துகிட்டு இருக்காங்க. இது எல்லா கட்சித் தலைகளுக்கும் பொருந்தும்//
அன்புள்ள நண்பரே... அவர்கள் மேடையில் தானே அமர்ந்துள்ளனர், கபடி விளையாட ஒண்ணும் போட்டி போடவில்லையே? அனுபவமும், பக்குவமும் அறிவின் மற்றும் வயதின் முதிர்ச்சியில் தான் வரும்..
Post a Comment